நெல்லை இரும்பு பட்டறைகளில் விவசாய பயன்பாட்டு ஆயுதங்களை தவிர அரிவாள்,கத்தி உள்ளிட்ட அபாயகரமான ஆயுதங்களை தயாரிக்க இன்று (ஆகஸ்ட் 9) திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தடைவிதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தும் ஆயுதங்கள் தயாரிக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.