முட்புதரில் கிடந்த பச்சிளம் குழந்தை மீட்பு : ஸ்ரீதயா பவுண்டேஷன் நிர்வாகிகள் பாராட்டு!

முட்புதரில் கிடந்த பச்சிளம் குழந்தை மீட்பு : ஸ்ரீதயா பவுண்டேஷன் நிர்வாகிகள் பாராட்டு!;

Update: 2025-08-09 10:48 GMT
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில், முட்புதரில் கிடந்த பச்சிளம் குழந்தையை, 14 வயது சிறுவன் சிவபாலு மீட்டான். போலீசாரும், பொதுமக்களும் சிறுவனின் துணிச்சலான செயலைப் பாராட்டினர். இந்த நிலையில், ஸ்ரீதயா பவுண்டேஷன் பிஎப்சி பாரத சேவா நிறுவனர் தலைவர் லதா ரஜினிகாந்த் ஆணைப்படியும் உயர்மட்ட குழு நிர்வாகிகள் கோவிந்தராஜ், சிவகாசி ரஜினி முருகன், வேல் முருகன் ஆலோசனை படியும் பச்சிளம் குழந்தையை மீட்டு முதலுதவி செய்து பால் புகட்டி போலீசாரிடம் ஒப்படைத்தவர்களை பவுண்டேஷன் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ராஜலட்சுமி சுரேஷ்குமார் மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஸ்ரீதேவி ஆகியோர் நேரில் சென்று வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

Similar News