பினாயில்,ப்ளீச்சிங் பவுடர் இல்லாமல் தூய்மை பணியில் மாநகராட்சி
திருநெல்வேலி மாநகராட்சி;
திருநெல்வேலி மாநகராட்சியில் கடந்த ஆண்டு 55 லட்சம் ரூபாய் மதிப்பில் பினாயில் வாங்கியதாக நடந்த ஊழல் விவாகரத்தில் பெரும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்து நகர் நல அலுவலர் ஆனி குயின் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதன் எதிரொலியாக இந்த ஆண்டு பினாயில், ப்ளீச்சிங் பவுடரே வாங்காமல் மாநகராட்சி தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.