ராசிபுரம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பௌர்ணமி பூஜை: திருத்தேர் ரதத்தில் சாமி ஊர்வலம்..

ராசிபுரம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பௌர்ணமி பூஜை: திருத்தேர் ரதத்தில் சாமி ஊர்வலம்..;

Update: 2025-08-09 13:35 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் காட்டூர் சாலை பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் அமாவாசை பௌர்ணமி மற்றும் முக்கிய விசேஷ தினங்களில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று சனிக்கிழமை பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பால், தயிர்,மஞ்சள், சந்தனம்,தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று பின்னர் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி உற்சவர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்து திருத்தேர் ரதத்தில் அம்மன் கோவிலை சுற்றி வலம் வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த சிறப்பு அலங்காரத்தை கோவில் பூசாரிகள் செ. சுப்பரமணியம், செ.பிரபு ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது..

Similar News