பட்டா வழங்கவில்லை என பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்
வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை முதல்வர் நிகழ்ச்சியில் தங்களுக்கு பட்டா வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு வைத்து பட்டா பெறாமல் கிளம்ப மாட்டோம் என்று வட்டாட்சியர் அலுவலகத்திலேயே காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு;
திருப்பூர் மாவட்டம் பல்லடம் செம்மிபாளையம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சுமார் 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்காக கையொப்பம் பெற்றுக்கொண்டு முதல்வர் நிகழ்ச்சியில் கடந்த 21ஆம் தேதி வழங்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து அதை எதிர்பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் அன்றைய தினம் முதல்வர் நிகழ்ச்சி உடல் நலம் சரி என்று ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது பதினொன்றாம் தேதி உடுமலையில் முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்று நடைபெறும் நலத்திட்ட உதவி நிகழ்ச்சியில் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் இதில் தங்களுக்கு வழங்கக் கூடாது என்று சிலர் இடையூறு ஏற்படுத்துவதாகவும் இதனால் தங்களை பட்டா பெரும் நிகழ்ச்சியில் என்பது மேற்பட்ட பொதுமக்களை அழைக்கவில்லை என்றும் முதல்வர் நிகழ்ச்சியில் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் இல்லையேல் இங்கேயோ பட்டா வழங்க வேண்டும் என்று வட்டாட்சியர் சபரீஸ் இடம் வாக்குவாதம் செய்து தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது