தாராபுரத்தில் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி
தாராபுரத்தில் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்;
ஆவணி அவிட்டத்தையொட்டி விஷ்வா பிராமண மகாஜன சங்கத்தின் சார்பில் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. தாராபுரம் அலங்கியம் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் வேத மந்தி ரங்கள் முழங்க பூணூல் மாற்றிக் கொண்டனர். இதில், சங்கத்தலைவர் டி.மோகன்ராஜ், செயலாளர் சிற்பி சிவகு மார், பொருளாளர் பூபதி சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.