ராசிபுரம் ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணன் கோவிலில் சிறப்பு பூஜை..
ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணன் கோவிலில் சிறப்பு பூஜை..;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பட்டை பெருமாள் கோவில் எனப்படும் ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ணன் கோவிலில் சிறப்பு பூஜை அபிஷேகங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ணன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்..