சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஊஞ்சல் விழா நடைபெற்றது

சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஊஞ்சல் விழா நடைபெற்றது;

Update: 2025-08-11 02:36 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோயில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி ஆடித்தபசு காட்சி கடந்த வாரம் கோலாகலமாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஊஞ்சல் விழா இரண்டாம் நாள் நேற்று கோமதி அம்மன் மற்றும் சங்கரலிங்கனாருக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபார தனையும் நடைபெற்றது. இதில் இரவு 7 மணிக்கு ஊஞ்சல் தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News