மதுரை குவாரி நீரில் குளிக்க சென்ற இரு சிறுவர்கள் பலி
மதுரை கருப்பாயூரணி பகுதியில் நேற்று மாலை குவாரி ஓடையில் குளிக்க சென்ற இது குழந்தைகள் பலியாகியுள்ளனர்;
மதுரை நகர் நரிமேடு பள்ளிவாசல் தெருவை சேர்ந்த புகாரி கான் என்பவரது மகள் சையது அலி சஹானா, (9) மகன் சபீர்,( 4) ஆகிய குழந்தைகள் இருவரும் விடுமுறையில் கருப்பாயூரணி பாண்டியன் கோட்டையில் உள்ள தங்களது பாட்டி வீட்டிற்கு சென்றனர். நேற்று (ஆக.10) மாலை, சஹானா தன் தம்பியுடன் அதே பகுதியை சேர்ந்த பெரியப்பா சுல்தான் மரைக்கானின் மகன் ஆஷிக் ராஜா( 3), மகள் ஆயிஷா( 9), ஆகியோருடன் அருகில் உள்ள கல் குவாரிக்கு நால்வரும் விளையாட சென்றுள்ளனர். குவாரி நீரில் குளிப்பதற்காக நால்வரும் இறங்கிய போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கிய ஆஷிக் ராஜாவை காப்பாற்ற மற்றவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றதில் ஆஷிக் ராஜா, சையது அலி சஹானா நீரில் மூழ்கி பலியானார்கள். விளையாட சென்ற குழந்தைகளை காணவில்லை என்று தேடிய ஆஷிக் ராஜாவின் தாய் பாத்திமா, நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த ஆயிஷா, சபீரை காப்பாற்றினார். அருகில் இருந்தவர்கள், இரு குழந்தைகளின் உடல்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.