குருவிகுளத்தில் விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலை
விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலை;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குருவிகுளம் மீனாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திகேயன் மகன் நைனார் (47) இவர் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் இருந்த பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் நைனாரே மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து குருவிகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.