ராமநாதபுரம் விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது
மதச்சார்பின்மை காப்போம் என்ற தலைப்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது;
ராமநாதபுரம்பெருந்திரள் மக்கள் எழுச்சி பேரணி புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்றது மாவட்ட செயலாளர்கள் அற்புதகுமார் பிரபாகரன் ஆகியோர்கள் தலைமை வகித்தனர் கூட்டத்தில் பெண்ணுரிமை காப்பது செம நல்லிணக்கம் பேணுவது சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது இதனை கூட்டத்திற்கு வந்தவர்கள் எழுந்து நின்று கரகோஷத்துடன் தீர்மானத்தை வரவேற்றனர் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி உள்ளிட்ட வர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர் தலைமை நிலைய பேச்சாளர்கள் அப்துல் ரகுமான் மாலின், முருகன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் இதில் ராமநாதபுரம் கீழக்கரை மண்டபம் தொண்டி திருவாடனை முதுகுளத்தூர் பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சார்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்