தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் துவக்கி வைத்தார்.

தேசிய குடற்புழு நீக்கல் மாத்திரை வழங்கும் திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 1,71,590 குழந்தைகள் மற்றும் மாணவர்கள், 45,034 பெண்கள் பயன்பெறவுள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.;

Update: 2025-08-11 15:44 GMT
தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் துவக்கி வைத்தார். பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில், தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் , பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரையின் பயன்குறித்தும், பயன்படுத்துவதின் முக்கியத்துவம் குறித்துமான உறுதிமொழியினை வாசிக்க, பள்ளி மாணவ,மாணவியர்கள் இன்று (11.08.2025) உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் பள்ளி மாணவ,மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கி முகாமினை தொடங்கி வைத்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இச்சிறப்பு முகாமில் 1 முதல் 19 வயதிலான குழந்தைகள் மற்றும் மாணவ மாணவியர்களுக்கும் மற்றும் 20 முதல் 30 வயதிலான அனைத்து பெண்களுக்கும் (கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர்த்து) குடற்புழு நீக்க மாத்திரை (அல்பென்டசோல்) வழங்கப்பட உள்ளது. மேலும் 1 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களிலும், 6 முதல் 19 வயது வரையுள்ள மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது. பள்ளிக்கு செல்லாத குழந்தைகளுக்கு கிராம சுகாதார செவிலியரும், அங்கன்வாடி பணியாளர்களும் வீடுவீடாக சென்று குடற்புழு மாத்திரைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விடுபட்ட குழந்தைகளுக்கு 18.08.2025 அன்று வழங்கப்படவுள்ளது. இம்மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுகள் களையப்பட்டு, குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் மாணவ, மாணவிகளின் கல்வித் திறன் மேம்படும். அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் மூலமாக குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது. தேசிய குடற்புழு நீக்கல் மாத்திரை வழங்கும் திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 1,71,590 குழந்தைகள் மற்றும் மாணவர்கள், 45,034 பெண்கள் பயன்பெறவுள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். இந்நிகழ்வில், இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மரு.மாரிமுத்து, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.கீதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) செல்வகுமார், நகர்மன்றத் துணைத்தலைவர் ஆதவன், தேசிய சுகாதார இயக்க திட்ட இயக்குநர் மரு.விவேகானந்தன், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News