ராமநாதபுரம் விபத்து இருவது பலி
சரக்கு வாகனமும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் முதல் பிறந்தநாள் கொண்டாடி 15 நாட்கள் மட்டுமே ஆன ஒரு வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு;
ராமநாதபுரம் அருகே வட்டான்வலசை பேருந்து நிலையம் அருகே ஆட்டோவும் சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆட்டோவில் பயணித்த முதல் பிறந்தநாள் கொண்டாடி 15 நாட்கள் ஆன ஒரு வயது ஆண் குழந்தை மற்றும் பெண் என இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வடகாடு பகுதியைச் சேர்ந்த சிவா (32), அவரது ஒரு வயது ஆண் குழந்தை தமிழ் இனியன் (1) அவரது உறவினர்களான ராணி(45), ராதிகா(50) என மொத்தம் நான்கு பேர் ராமேஸ்வரத்தில் இருந்து ஆட்டோவில் ராமநாதபுரம் நோக்கி சென்றுள்ளனர். ஆட்டோ உச்சிப்புளி அடுத்த வட்டான்வலசை பேருந்து நிலையம் அருகே மதுரை தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே ராமநாதபுரத்திலிருந்து உச்சிப்புளி நோக்கி வந்த சரக்கு வாகனம் திடீரென வட்டான்வலசை ஊரை நோக்கி திரும்புவதற்காக வலது புறம் திரும்பிய திரும்பிய போது எதிரே வந்த ஆட்டோவின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிவா அவரது ஒரு வயது ஆண் குழந்தை தமிழ் இனியன், ராணி, ராதிகா ஆட்டோவை ஓட்டி வந்த ஓட்டுநர் சுரேந்திரன் (30) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உச்சிப்புளி போலீசார் அவர்களை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மருத்துவமனை வரும் வழியே ஒரு வயது ஆண் குழந்தை தமிழ் இனியன் உயிரிழந்தான். மேலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ராணி என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். மேலும் காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து உச்சிப்புளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆட்டோ சரக்கு வாகனம் நேருக்கு வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் முதல் பிறந்தநாள் கொண்டாடி 15 நாட்கள் மட்டுமே ஆன ஒரு வயது ஆண் குழந்தை மற்றும் பெண் என இருவர் உயிரிழந்த சம்பவம் ராமேஸ்வரம் வடகாடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.