சுரண்டை விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
சுரண்டை விஷம் குடித்து வாலிபர் தற்கொலை;
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டையை சேர்ந்த முத்துக்குமார் (25). என்பவர் குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து விட்டதாக உரிமையாளரிடம் தொடர்பு கொண்டு போனை அணைத்துவிட்டார். இந்த தகவல் அறிந்த உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. நேற்று காலை பரங்குன்றாபுரம் பாலத்தில் மயங்கிய நிலையில் கிடந்தவரை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து சுரண்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.