தென்காசி ஆட்சியர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
ஆட்சியர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்;
தென்காசி மாவட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அப்போது பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.