நன்னகரத்தில் புதிய நியாய விலைக் கடையை ஆட்சியர் திறந்து வைத்தார்

புதிய நியாய விலைக் கடையை ஆட்சியர் திறந்து வைத்தார்;

Update: 2025-08-12 11:49 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூட்டுறவுத்துறையின் சார்பில் தண்டையார்பேட்டை, கோபால் நகரில் தமிழ்நாட்டிலுள்ள வயது சென்னை, முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் "முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்" மூலம் பயனாளிகளுக்கு ரேசன் பொருட்களை வழங்கி தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து இன்று தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூராட்சிக்குட்பட்ட நன்னகரம் பகுதியில் உள்ள நியாய விலைக்கடையில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கே சென்று குடிமைப் பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.கமல்கிஷோர் அவர்கள், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் அவர்கள், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர். சதன் திருமலைக்குமார் அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள்.

Similar News