தமிழகஅரசு மூத்த குடிமக்களுக்கு நகர பேருந்துகளில் இலவச பயணசலுகை வழங்க வலியுறுத்தி அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
தமிழக அரசு மூத்த குடிமக்களுக்கு நகர பேருந்துகளில் இலவச பயண சலுகை வழங்க வலியுறுத்தி அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;
அரியலூர், ஆக. 12 - தமிழக அரசு மூத்த குடிமக்களுக்கு நகர பேருந்துகளில் இலவச பயண சலுகை வழங்க வலியுறுத்தி அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தனியார் கூட்ட அரங்கில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் சங்க கூட்டமைப்பு கூட்டம் வட்டத் தலைவர் சுந்தரேசன் தலைமையில் நடைபெற்றது.கௌரவ தலைவர் சிவ சிதம்பரம் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.முன்னதாக நிர்வாகி ராசகோபால் வரவேற்று பேசினார் கலியமூர்த்தி அறிக்கை இனவாசித்தார் பொருளாளர் ராமமூர்த்தி வரவு செலவு வாசித்தார் பாலகிருஷ்ணன் நீத்தார் நித உதவி திட்ட வரவு செலவு வாசித்தார்.கூட்டத்தில் பொன்னேரி என்கின்ற சோழங்கம் ஏரியை மேம்படுத்த கடந்த ஐந்து ஆண்டுகளாக சென்னை மற்றும் டெல்லியில் தங்கி அயராது பணியாற்றும் மருதூர் ஸ்ரீ பெரியசாமியை இயக்கத்தின் சார்பாக பாராட்டப்பட்டது.70 வயது நிறைவுக்கு கூடுதல் பென்ஷன் புதிய பென்ஷன் திட்டம் ரத்து மூத்த குடிமக்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவச பயணச் சலுகை உள்ளிட்டவைகள் வழங்கிட தமிழக அரசை வலியுறுத்திய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் நிர்வாகி ராமையன் நன்றி கூறினார்