தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் விசிக தலைவரிடம் கோரிக்கை மனு

வாழ்வாதார கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் பரிந்துரை செய்து உதவிடுமாறு கோரிக்கை மனு;

Update: 2025-08-12 17:26 GMT
சிதம்பரம் நாடளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் அவர்களை தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் பொறுப்பாளர்களோடு சந்தித்து வாழ்வாதார கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் பரிந்துரை செய்து உதவிடுமாறு கோரிக்கை மனு கொடுத்தனர். இந்த நிகழ்வில் மாநிலத் தலைவர் கி. மகேந்திரன் பெரம்பலூர் மாவட்ட கௌரவ தலைவர் ஏவிஇ. பாபுவாணன், மாவட்ட தலைவர் பா. சுந்தர பாண்டியன், மாவட்ட செயலாளர் ம .அருண்குமார் மாவட்ட பொருளாளர் இரா .வெங்கடேசன், மாநில it wing தலைவர் ராஜ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Similar News