குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட குழிகளை மூட வேண்டும்!
தூத்துக்குடியில் குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட குழிகளை மூட வேண்டும் : சமூக ஆர்வலர்கள் கோரிக்கை;
தூத்துக்குடி விவிடி மெயின் ரோடு, டூவிபுரம் பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. இதன் பின்னர் ஒருசில இடங்களில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படவில்லை. இதனால் நடைபாதையில் செல்லும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, குழிகளை மூடி நடைபாதையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.