பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்
பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை: மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்!;
தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கு தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கும் பணியினை மாநகராட்சி சிவந்தாகுளம் பள்ளியில் மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால் மாமன்ற உறுப்பினர் கனகராஜ், பள்ளியின் தலைமை எமல்டா வெலன்சியா ஹெசியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.