திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்கிறார்
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்கிறார்;
திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் பத்தாவது பட்டமளிப்பு விழா 2025 செப்டம்பர் 03 அன்று நடைபெற உள்ளது. இந்தப் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவரும், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் மேன்மையருமான திருமதி திரௌபதி முர்மு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவுள்ளார். இத்தகவலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் எம் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.