ராசிபுரத்தில் கூலி திரைப்படத்தை முன்னிட்டு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கூலி திரைப்படம் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுடன் விடுமுறை வழங்கிய உரிமையாளர்..
ராசிபுரத்தில் கூலி திரைப்படத்தை முன்னிட்டு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கூலி திரைப்படம் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுடன் விடுமுறை வழங்கிய உரிமையாளர்..;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் யா கிரியேஷன் என்ற பெயரில் ஐடி நிறுவனமானது செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 25க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில் நாளை ரஜினி நடிப்பில் கூலி திரைப்படமானது வெளியாக உள்ளது. பல்வேறு பகுதிகளில் ரசிகர்கள் திரைப்படத்தை காணும் நிலையில் ராசிபுரத்தில் செயல்பட்டு வரும் ஐ டி நிறுவனத்தின் உரிமையாளர் ஈஸ்வரன் தனது நிறுவனத்தில் பணிபுரியும் 25க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு திரைப்படத்திற்கான முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டை வழங்கி நாளை விடுமுறை வழங்கி உள்ளார். விடுமுறை வழங்குவதற்காக அந்த நிறுவனத்தில் பணி புரியும் HR மேலாளர் கீர்த்தனா வீடியோவை வெளியிட்ட நிலையில் தற்போது அது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ஐடி நிறுவனத்தின் உரிமையாளர் ஈஸ்வரன் கூறுகையில், தனது நிறுவனமானது கடந்த 6 வருடங்களாக ராசிபுரம் பகுதியில் செயல்பட்டு வருவதாகவும் தொடர்ந்து ஒவ்வொரு திரைப்படத்திற்கும் தான் எனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு டிக்கெட்டை வழங்கி விடுமுறை வழங்கி வருவதாகவும், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 50-வது ஆண்டை நிறைவை முன்னிட்டு ஊழியர்களுக்கு நான் விடுமுறையுடன் டிக்கெட்டை வழங்கியதாக தெரிவித்தார்...