குமரி மாவட்டம் இரணியல் அருகே புல்லுவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் ஐயப்பன் (52). கட்டிடத் தொழிலாளி. திருமணம் ஆகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் சாரத்தின் மீது நின்று சுவர் பூச்சு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் நிலை தடுமாறி கீழே விழுந்தார். கழுத்து பகுதியில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் உறவினர்கள் மீட்டு ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ஐயப்பன் பலியானார். இது குறித்து அவரது மகன் அஜின் அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.