குமரி மாவட்டம் குளச்சல், கொட்டில்பாடு பகுதியை சேர்ந்த பிளஸ் டூ முடித்து கல்லூரி செல்வதற்காக தயாராகி வரும் மாணவருக்கும், வாணியகுடி பகுதி கேரோ என்பவகுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று கேரோ உட்பட 3 பேர் மாணவரை . பைக்கில் வலுக்கட்டாயமாக ஏற்றி சென்று பின்னர் செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டை பறித்தனர். மேலும் ஏடிஎம் கார்டு பின் நம்பரை கேட்டு கேட்டு அவர் சொல்ல மறுத்தபோது ஆத்திரமடைந்த 3 பேரும் மாணவரை தாக்கினர். பின்னர் மிரட்டி 15 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்து சென்றனர். படுகாயம் அடைந்த மாணவர் குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து 3பேரையும் தேடி வருகின்றனர்.