கோவை முத்தண்ணன் குளத்தில் மண் கடத்தல் – செல்போன் வீடியோ வைரல் !

முத்தண்ணன் குளத்தில், ஜேசிபி மூலம் மண்ணை வெட்டி மினி லாரிகளில் ஏற்றி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2025-08-14 09:21 GMT
கோவை ஆர்.எஸ்.புரம் காந்தி பார்க் அருகே உள்ள முத்தண்ணன் குளத்தில், ஜேசிபி மூலம் மண்ணை வெட்டி மினி லாரிகளில் ஏற்றி சென்றது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. இதுகுறித்து ஒருவரால் லாரி ஓட்டுனரிடம் கேள்வி எழுப்பப்பட்டு, அந்த உரையாடல் செல்போனில் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. லாரி ஓட்டுனர், எம்.எஸ். இன்ஜினியரிங் நிறுவனம் மாநகராட்சி பணிக்காக மண் எடுக்கிறது என்று தெரிவித்தாலும், தொலைபேசியில் நிறுவனத்தினர் மறுத்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இச்சம்பவம், குள சேதத்தை தடுக்கும் வகையில் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளது.

Similar News