படுகாயம் அடைந்த மயிலை ஆம்புலன்ஸில் மீட்ட ஓட்டுனர் – கோவையில் பாராட்டு !

காயமடைந்த மயிலுக்கு உயிர்காக்கும் சேவை.;

Update: 2025-08-14 09:23 GMT
கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பிரதாப், காங்கேயம்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் மோதியதால் படுகாயம் அடைந்த மயிலை மீட்டு, 25 நிமிடத்தில் வடகோவை வன உயிரின மருத்துவமனைக்கு நேற்று கொண்டு சென்று ஒப்படைத்தார். அங்கு மயிலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், காளப்பட்டியில் இறந்த நிலையில் இருந்த மற்றொரு மயிலையும் அவர் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தார். வன உயிரினங்கள் காயமடைந்தால் உடனடியாக தகவல் அளித்து உயிர்களை காப்பாற்ற அனைவரும் முன்வர வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Similar News