கோவை: இருகூர் பேரூராட்சியில் சாக்கடைப் பணிகள் நின்று மக்கள் அவதி !
இருகூரில் சாக்கடைப் பணிகளில் தாமதம் ஏற்பட்டு இருப்பதால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.;
கோவை, இருகூர் பேரூராட்சியில் ஆறு மாதங்களாக நிறுத்தப்பட்ட சாக்கடை கால்வாய்ப் பணிகள் காரணமாக, இந்திரா நகர் மற்றும் நாராயணசாமி லே அவுட் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மூடப்படாத பள்ளங்களில் மக்கள் தற்காலிக பாலங்கள் அமைத்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு கால் முறிவு ஏற்பட்டது. சுற்றுச்சுவர்கள் இடிந்து விழும் அபாயமும் நிலவுகிறது. மாற்றுத்திறனாளிகள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்படுகின்றனர். இதையடுத்து, மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, பணிகளை உடனடியாக முடிக்கக் கோரி மனு அளித்தனர். நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிடுவதாக எச்சரித்தனர்.