கோவை அருகே ஓய்வுபெற்ற விமானப்படை வீரர் விபத்தில் உயிரிழப்பு !
யூட்டானால் ஏற்பட்ட விபத்தில் முன்னாள் விமானப்படை வீரர் உயிரிழப்பு.;
கோவை மாவட்டம் சூலூர் அருகே, ஓய்வுபெற்ற விமானப்படை வீரர் ஹரிஹரன் (வயது 62), மனைவியை அழைத்து வரச் செல்லும் போது, யூ-டர்ன் வளைவில் திரும்பிக்கொண்டிருந்த அவரின் வாகனம் மீது வேகமாக வந்த கார் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சூலூர் காவல்துறை இது குறித்து நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அப்பகுதியில் அறிவிப்பு பலகை, ஸ்பீட் பிரேக்குகள் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதால் அறிவிப்பு பலகைகளை உடனடியாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.