ரகசிய கூட்டம் போட்டு முத்தவள்ளிகளை தேர்ந்தெடுக்கும் பணியை நிறுத்த வேண்டும்
ரகசிய கூட்டம் போட்டு முத்தவள்ளிகளை தேர்ந்தெடுக்கும் பணியை நிறுத்த வேண்டும்;
திருப்பத்தூர் மாவட்டக் திருப்பத்தூரில் 200 கோடி மதிப்பிலான வக்ஃபு வாரிய சொத்துக்களை ஏமாற்றியதாக முத்தவல்லிகள் மீது புகார்! ரகசிய கூட்டம் போட்ட முன்னால் முத்தவல்லிகள்! தேர்தல் இல்லாமல் முத்தவல்லிகளை தேர்ந்தெடுக்க கூடாது என சாலை மறியல் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கருப்பனூர் பகுதியைச் சேர்ந்த ஜானி பாஷா மகன் வாஜித் (43) சமூக ஆர்வலர் திருப்பத்தூரில் உள்ள பல்வேறு மசூதிகளின் சொத்துக்களை மசூதிகளின் முத்தல்லிகள் தனி நபர்கள் மற்றும் தங்களுடைய உறவுமுறை சொந்தங்களுக்கு சுமார் 200 கோடிக்கு மேல் சொத்துக்களை விற்று உள்ளனர் இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் எஸ்பி அலுவலகம் என பல்வேறு இடங்களில் மனு அளித்துள்ளனர் ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை இந்த காரணமாக டெல்லியில் உள்ள வக்ஃபு வாரியத்திலும் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்திலிருந்து விசாரணைக்காக வரும் 23ஆம் தேதி ஆஜராக வேண்டும் என கடிதமும் வந்துள்ளது. இதனை அறிந்த முன்னால் முத்தவள்ளிகள் மசூதியில் ரகசிய கூட்டம் போட்டு தங்களுக்கு தேவையான மூத்த வள்ளிகளை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த வாஜித் சமூக ஆர்வலர் தரப்பினர் முறையான தேர்தல் நடத்தி முத்தவள்ளிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கூறி கோட்டை தெரு பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அறிந்த திருப்பத்தூர் நகர போலீசார் மற்றும் திருப்பத்தூர் வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து இது குறித்து உள்ள ரகசிய கூட்டம் போட்டு முத்தவள்ளிகளை தேர்ந்தெடுக்கும் பணியை நிறுத்த வேண்டும் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியதன் காரணமாக அனைவரும் அங்கிருந்து கலந்து சென்று இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.