மக்களை தேடி மக்கள் தலைவர் சுற்றுப்பயணத்தில் பிரேமலதா விஜயகாந்த் ராசிபுரத்தில் வருகை கட்சியினர் உற்சாக வரவேற்பு..
மக்களை தேடி மக்கள் தலைவர் சுற்றுப்பயணத்தில் பிரேமலதா விஜயகாந்த் ராசிபுரத்தில் வருகை கட்சியினர் உற்சாக வரவேற்பு..;
மக்களை தேடி மக்கள் தலைவர் சுற்றுப்பயணத்தில் பிரேமலதா விஜயகாந்த் ராசிபுரத்தில் வருகை கட்சியினர் உற்சாக வரவேற்பு.. கேப்டனின் கனவு திட்டம் பெண்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார் இன்று தமிழக அரசு அதனை தாயுமானவர் திட்டம் என கையில் எடுத்துள்ளதாக பிரேமலதா பேச்சு... மக்களைத் தேடி மக்கள் தலைவர் எனும் தலைப்பில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இன்று வியாழக்கிழமை நாமக்கல் மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு அளித்து அதனைத் தொடர்ந்து ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் ராசிபுரம் நகர கழக செயலாளர் ஆ. இளையராஜா தலைமையில் பூரண கும்ப மரியாதை உடன் சிறப்பான வரவேற்பு நிகழ்ச்சியானது நடைபெற்றது. பிரேமலதா விஜயகாந்த்க்கு கட்சி நிர்வாகிகள், பெண்கள் என பலர் மாலை அணிவித்து மலர் தூவி ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். மேலும் அவர் உடன் கழக துணை பொதுச் செயலாளர் சுதீஷ், என பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், கேப்டனின் ரத யாத்திரத்தை உருவாக்கிய பெருமை இலங்கைக்குப் பிறகு நாமக்கல் மாவட்டத்திற்கு தான் சேரும், தமிழக மக்களுக்காக கேப்டன் பல்வேறு திட்டங்களை செய்து இருக்கிறார்.அந்த திட்டங்களை அரசு செய்தால் எல்லா தரப்பு மக்களுக்கும் எல்லா பலன்களும் அடையும், கேப்டனின் கனவு திட்டம், லட்சியத் திட்டம் பெண்களுக்கு வீடு தேடி ரேஷன் வழங்கப்படும் என அறிவித்திருந்தார் அதனை இன்று தமிழக அரசு தாயுமானவர் திட்டம் என கையில் எடுத்துள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.. இந்த நிகழ்வில் தேமுதிக வடக்கு மாவட்ட கழக செயலாளர் விஜய சரவணன், மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.