இரட்டை மாரியம்மன் கோவிலில் திருவிழா பெண்கள் பால்குடம் மற்றும் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலம்..
இரட்டை மாரியம்மன் கோவிலில் திருவிழா பெண்கள் பால்குடம் மற்றும் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலம்..;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை பகுதி சின்ன அரியா கவுண்டம்பட்டி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ இரட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வாரத்தில் அம்மனுக்கு கோவிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்து அப்பகுதி மக்கள் வழிபடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்து முன்னதாக ஸ்ரீ இரட்டை மாரியம்மன் நண்பர்கள் குழு சார்பில் 22 ஆம் ஆண்டாக இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் என 108, பால்குடம் மற்றும் தீர்த்த குடம் முளைப்பாரி எடுத்து நாமகிரிப்பேட்டை வார சந்தை பகுதியில் இருந்து மேள தாளங்கள் உடன் ஆண்கள் ஆட்டம் ஆடி முக்கிய வீதி வழியாக சென்று ஸ்ரீ இரட்டை மாரியம்மன் கோவிலில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.