குமரி முத்தமிழ் மன்ற கூட்டம் காப்புக்காட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது. கவிஞர் ஞானாமிர்தம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பாபு வரவேற்றார். நிறுவனத் தலைவர் முளங்குழி பா. லாசர் கருத்துரை வழங்கினார். செயலர் சஜீவ் செயல்பாட்டுரை வழங்கினார். புதிய உறுப்பினர்கள் சத்தியநேசன் ,ராஜேஷ் ஆகியோர் அறிமுகவுரை செய்தனர். கவிஞர் ஜெயகுமாரி கவிதை படித்தார். பாரத கலாச்சார பேரவை தலைவர் பாஸ்கரன், புதுக்கடை பேரூராட்சி முன்னாள் தலைவர் மோகனகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து இவ்வாண்டு தமிழக அரசால் தமிழறிஞர்களாக அறிவிக்கப்பட்ட சாமுவேல் ரவி, வரதராஜன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். வீரமாமுனிவர் பேச்சாளர்ப்பேரவை தலைவர் கவிஞர் ஆகிரா இலக்கிய இன்பம் குறித்து பேசினார். 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பொருளாளர் தமிழ்மாறன் நன்றி கூறினார்.