மழை,வெயில் என பாராமல் சாலையில் நின்று போக்குவரத்தை சீர் செய்து வரும் போக்குவரத்து போலீசாருக்கு பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது,அந்த வகையில் மழைக்காலத்தில் பணியின் போது ஆடை அணிந்து உடல் நலம் பாதிக்கும் சூழல் ஏற்படுவதால் அவர்களின் நலன் கருதி ரெயின் கோட் (கவச உடை)வழங்கும் நிகழ்ச்சி நேற்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முதற்கட்டமாக 50 போக்குவரத்து காவலர்களுக்கு எஸ் பி ஸ்டாலின் வழங்கினார். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள போக்குவரத்து காவலர்களுக்கும் விரைவில் வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.