உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் எம்எல்ஏ பங்கேற்பு

வன்னியூர்;

Update: 2025-08-15 04:11 GMT
தமிழக முதலமைச்சர் உத்தரவுப்படி தமிழ்நாடு முழுவதும் கடந்த மாதம் 15-ம் தேதி முதல் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று குமரி மாவட்டம் வன்னியூர் ஊராட்சியில் முகாம் நடந்தது. முகாமில் மகளிர் உரிமைத் தொகை, வருவாய்துறை, மருத்துவத் துறை, காவல்துறை, விவசாய துறை மின்சார துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை,, உள்ளிட்ட அரசு துறைகளை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர். இதில் குறிப்பிட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. முகாமில் விளவங்கோடு எம்.எல் ஏ தாரகை கத்பட், காாங்., நிர்வாகி ராஜேஷ் பங்கேற்றனர்., இந்த முகாமில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Similar News