கோயம்புத்தூர் சுகுணாபுரம் பள்ளியில் எஸ்.பி. வேலுமணி சுதந்திர தின விழா !
சுகுணாபுரம் அரசு பள்ளியில் தேசிய கொடி ஏற்றி வைத்த அதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி வேலுமணி.;
கோயம்புத்தூர் சுகுணாபுரம் மாநகராட்சி துவக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் சுதந்திர தின விழாவில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி தேசியக்கொடி ஏற்றி கலந்து கொண்டார். பின்னர் உரையாற்றிய அவர், தாம் படித்த பள்ளியில் சுதந்திர தின விழாவில் பங்கேற்பது பெருமையாக உள்ளதாகக் கூறி, சுதந்திரத்தை பெற்றுத் தந்த முன்னோர்களையும் நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களையும் பாராட்டினார். பள்ளி தொடர்பான சாலை அகலப்படுத்தல், காம்பவுண்டு சுவர், கட்டிட வலிமை, குடிநீர் தொட்டி, இடவசதி உள்ளிட்ட பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்றும், அருகில் புதிய கட்டிடம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் உறுதியளித்தார். மாணவர்கள் மருத்துவம், பொறியியல், நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் உயர்ந்த பதவிகளில் பணியாற்ற வேண்டும் என வாழ்த்தினார். விழாவில் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.