கோவை இஸ்கான் கோவிலில் பிரம்மாண்ட சுதர்சன சக்கர பிரதிஷ்டை விழா !

தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய சுதர்சன சக்கர பிரதிஷ்டை விழா.;

Update: 2025-08-15 07:34 GMT
கோவை இஸ்கான் கோவில், தனது 25வது ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழாவை வரும் ஆகஸ்ட் 16, சனிக்கிழமை, கோலாகலமாகக் கொண்டாட உள்ளது. இதனை முன்னிட்டு, விழாவுக்கு முன்னோட்டமாக தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய சுதர்சன சக்கர பிரதிஷ்டை விழா நடைபெறுகிறது. இந்த சுதர்சன சக்கரம் 13 அடி விட்டத்துடன், தரையிலிருந்து 108 அடி உயரத்தில், சுமார் 1 டன் எடையில் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் கட்டுமானத்தில் உள்ள ஸ்ரீ ராதா கிருஷ்ணர் கோபுரத்தின் உச்சியில் இந்த புனித சக்கரத்தாழ்வார் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. பிரதிஷ்டை விழா தற்போது நடைபெறுகிறது. இதையடுத்து ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் மகா அபிஷேகம் மற்றும் பல்வேறு ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News