கோவையில் சாலை பள்ளத்தில் சிக்கிய லாரி – போக்குவரத்து பாதிப்பு !
புதிய சாலையில் பள்ளம்- லாரி சிக்கி ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல்.;
கோவை சாய்பாபா காலனியில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே புதிதாக சீரமைக்கப்பட்ட சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் இரும்புக் கம்பிகள் ஏற்றிய லாரி சிக்கிக் கொண்டதால் நேற்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மாநகராட்சியின் குடிநீர், பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் முறையாக சீரமைக்கப்படாததால் இவ்வாறு பள்ளங்கள் உருவாகி வாகனங்கள் சிக்கிக் கொள்வது அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். சாலையை தரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.