சிந்தாமணி அகத்தியர் கோவில் முளைப்பாரி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது
அகத்தியர் கோவில் முளைப்பாரி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது;
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சிந்தாமணியில் அமைந்துள்ள செங்குந்தர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அகத்தியர் திருக்கோவிலில் ஆடி மாத முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு விரதமிருந்து வேண்டிக்கொண்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் முளைப்பாரிகளை தலையில் ஏந்தி ஊரில் உள்ள குளத்தில் கரைப்பதற்காக நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச்சென்றனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.