குமரி :   சுதந்திரதின விழாவில் கலெக்டர்  தேசியக்கொடியேற்றினார்

நாகர்கோவில்;

Update: 2025-08-15 13:44 GMT
இந்திய திருநாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி,  கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், அறிஞர் அண்ணா விளையாட்டரங்க மைதானத்தில் இன்று (15.08.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா  கலந்து கொண்டு, தேசியக்கொடியினை ஏற்றினார். அதனைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தேசியகொடிக்கு  மரியாதை செலுத்தி, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். பின்னர், சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெண்புறாக்கள் மற்றும் வண்ண பலூன்களை பறக்கவிட்டார்கள். தொடர்ந்து நலஉதவிகள் வழங்கல், கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

Similar News