குமரி மாவட்டம் குளச்சல் ஜேம்ஸ் நர்சிங் கல்லூரியில் இந்திய 79 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி தலைவர் டாக்டர் ஜேம்ஸ் பிரேம்குமார் தலைமையில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி பொருளாதார துறை முன்னாள் பேராசிரியர் முனைவர் ஜெயபாலாஜி தேசிய கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார். ஜேம்ஸ் மருத்துவமனை முன்னாள் மகப்பேறு மருத்துவர் செனிகா பிரேம்குமார், நர்சிங் கல்லூரி முதல்வர் ஜெய நிஷா மற்றும் பேராசிரியைகள், மாணவிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியிடையே மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.