கரூர்-இல.கணேசன் மறைவிற்கு அஞ்சலி செலுத்திய பாரதிய ஜனதா கட்சியினர்.

கரூர்-இல.கணேசன் மறைவிற்கு அஞ்சலி செலுத்திய பாரதிய ஜனதா கட்சியினர்.;

Update: 2025-08-16 06:44 GMT
கரூர்-இல.கணேசன் மறைவிற்கு அஞ்சலி செலுத்திய பாரதிய ஜனதா கட்சியினர். தமிழகத்தின் முன்னாள் பாரதிய ஜனதா கட்சியினுடைய மாநில தலைவரும் , நாகலாந்து மாநில ஆளுனருமான இல. கணேசன் நேற்று சென்னையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் அவருக்கு இதய அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் உள்ள காமராஜர் சிலை முன்பு இல.கணேசன் திருவுருவப்படத்திற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் செந்தில்நாதன் தலைமையில் மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் சாமிதுரை, RVS செல்வராஜ், மாவட்ட துணைத் தலைவர் சக்திவேல் முருகன், மாவட்ட செயலாளர்கள் முருகேசன், காவேரி மோகன்ராஜ், மத்திய மாநகர் தலைவர் சரண்ராஜ் உட்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News