கோவை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு !

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது;

Update: 2025-08-16 06:47 GMT
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட இவ்விழாவில், மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் பக்தர்களுக்குப் பொது விருந்து அளிக்கப்பட்டது. இதில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி கலந்து கொண்டு பொதுமக்களுடன் இணைந்து உணவருந்தினார். மேலும் அவர் பக்தர்களுக்கு சேலை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி, கழகச் செயலாளர் செந்தில்குமார், துணைச் செயலாளர் அபுதாஹிர், பொதுக்குழு உறுப்பினர் சாந்தலிங்ககுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Similar News