கோவை ப்ரோஜோன் மால் ஐநாக்ஸ் திரையரங்கில் பரபரப்பு !
ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டதால், 18 வயதிற்கு குறைந்த குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டதால், 18 வயதிற்கு குறைந்த குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், குழந்தைகளுடன் வந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்து, டிக்கெட் தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மால் நிர்வாகம், பணத்தை திரையரங்கில் வழங்க முடியாது, BookMyShow செயலி வழியே மட்டுமே பெறலாம் என தெரிவித்ததால், ரசிகர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. ரசிகர்கள், ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் A சான்றிதழ் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும் என்றும், பணத்தை திரும்பப் பெற எளிய முறைகள் அமைய வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்துள்ளனர்.