கோவை புறநகரில் கொங்கு பெருஞ்சலங்கையாட்டம் !
கோவை மாவட்டம் சூலூர் சிவன் கோவிலில், பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் விதமாக உள்ளிவிளவு எனப்படும் கொங்கு பெருஞ்சலங்கையாட்டம் சிறப்பாக நடைபெற்றது.;
கோவை மாவட்டம் சூலூர் சிவன் கோவிலில், பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் விதமாக உள்ளிவிளவு எனப்படும் கொங்கு பெருஞ்சலங்கையாட்டம் சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் ராவத்தூர் பிரிவு பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் மற்றும் பெரியவர்கள் பங்கேற்று சலங்கை கட்டி ஆடியனர். ஒற்றை அடி, இரட்டை அடி எனத் தாளமிட்டு அதிரவிட்ட இளைஞர்களின் ஆட்டம் பார்வையாளர்களை கவர்ந்தது. புராண இசை வாத்தியங்கள் முழங்கிய நிலையில், பாரம்பரிய கலை வடிவம் மிளிர்ந்த இவ்விழா, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.