பாஜகவின் ஏவல் துறையாக செயல்படும் அமலாக்கத்துறை
ராஜேஷ்குமார் எம் எல் ஏ பேட்டி;
குமரி மாவட்டம் படந்தாலுமூடு பகுதியில் காங்கிரஸ் மருத்துவ அணி சார்பில் இலவச சித்த மருத்துவ முகாம் இன்று நடந்தது. முகாமை துவங்கி வைத்து, மரக்கன்றை நடவு செய்த தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சட்டப்பேரவை குழு தலைவர் ராஜேஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:- பாஜக தனது ஏவல் துறையாக செயல்படும் துறைகளை வைத்து பூச்சாண்டி காமித்து வருகிறது. இதற்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். தேர்தல் நெருங்கி வரும் வேளையில் வாக்கு வங்கியை பெறுவதற்கு இது போன்ற ஏவல் துறையை வைத்து சோதனையை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துக்கொண்டு வாக்குகளை திருடி வெற்றி பெற்று இருப்பது வெட்ட வெளிச்சம் மாகி இருக்கிறது. தீபாவளி பரிசையும் தேர்தலை முன்னிறுத்தி தான் அவர் பேசியிருக்கிறார். ஜிஎஸ்டிஎல் மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். என கூறினார். இந்த பேட்டியின் போது காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.