சங்கரன்கோவில் அருகே குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் முற்றுகை

குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் முற்றுகை;

Update: 2025-08-17 01:25 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள புது சுப்புலாபுரம் என்ற கிராமத்தில் இரண்டு மாதங்களுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை எனவும் , அந்த கிராமத்தில் அடிப்படை வசதியான குடிநீர் வழங்கப்படவில்லை என கோரி, தென்காசி மாவட்ட ஆட்சியர் வரை மனு கொடுத்ததும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள், பொதுமக்கள் என சுமார் 100க்கும் மேற்பட்டோர், உடனடியாக குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும் என கூறி, காலி குடங்களுடன் காரிச்சாத்தான் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் . போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஊராட்சி மன்ற அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News