சங்கரன்கோவில் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி

பைக்கில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி;

Update: 2025-08-17 01:29 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து பெரும்பத்தூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா். பெரும்பத்தூா் அருகே சென்றபோது திடீரென்று நாய் குறுக்கே வந்ததால் தவறி விழுந்து பலத்த காயம் அடைந்தாா். உடனே அவா் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கரிவலம் வந்தநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Similar News