பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்!
பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: பெண்கள் இணைப்பு குழு மாநாட்டில் தீர்மானம்;
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் பெண்கள் இணைப்பு குழு தலைவி சீலு வரவேற்றார். எழுத்தாளர் வளர்மதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தமிழ்நாடு மக்கள் நல இயக்கத்தின் மாநில தலைவர் சமு காந்திக்கு சமத்துவத்திற்கான விருது வழங்கப்டப்டது. மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் இருந்து சுமார் 500 பெண்கள் அமைப்பினர் கலந்து கொண்டார்கள் மாநாட்டில், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், கஞ்சா புகையிலை போன்ற பொருட்கள் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும், பெண்கள் திருமணத்தின் போது அவர்களுக்கு பணம் அன்பளிப்பு எதுவும் வழங்கப்படாது, பெண்களும் ஆண்களும் சமமாக சமத்துவடன் நடத்தப்படும் பெண் விவசாயிக்கு இரண்டு ஏக்கர் நிலங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உட்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.