சுதந்திர தினத்தில் மாணவர்களுக்கு கள்ளச் சந்தையில் மது விற்ற நபர் கைது
சுதந்திர தினத்தன்று மாணவர்களுக்கு மது விற்ற சதீஷ் – காவல் துறையின் வலைவீச்சில் சிக்கினார்.;
கோவை மாவட்டம் சூலூர் அருகே நீலாம்பூர் பகுதியில், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கள்ளச் சந்தையில் அதிக விலையில் மது விற்ற சதீஷ் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். ரகசிய தகவலின் அடிப்படையில் ரோந்துப் போன காவல்துறையினர், சதீஷ் பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.