தமிழ்நாடு காப்பாளர் உரிமை பாதுகாப்பு சங்க சார்பில் சேலம் மாவட்ட செயற்குழு கூட்டம்,
தமிழ்நாடு காப்பாளர் உரிமை பாதுகாப்பு சங்க சார்பில் சேலம் மாவட்ட செயற்குழு கூட்டம்,;
உங்களைப் பொறுத்தவரை நான் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் என்று தான் தெரியும்,நானும் ஒரு ஆசிரியர் தான் என ராசிபுரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் காப்பாளர் உரிமை பாதுகாப்பு சங்க நிகழ்ச்சியில் பேசிய ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் அமைச்சர் மதிவேந்தன்... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பட்டணம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு காப்பாளர் உரிமை பாதுகாப்பு சங்க சார்பில் சேலம் மாவட்ட செயற்குழு கூட்டம்,சேலம் மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை பள்ளியில் 100% தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா,புதிய நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழாவானது நடைபெற்றது. இவ்விழாவில் ஆதிதிராவிட நலத் துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு, ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், சுற்றுலாத்துறைz வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்திருந்தாலும் நான் உடன் பிறந்தவர்கள் துறை என்றால் அது ஆதிதிராவிட நலத்துறை தான், ஆசிரியர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளீர்கள் அது கூடிய விரைவில் தலைமைச் செயலகத்தில் கொண்டு சென்று அதற்கான தீர்வு காணப்படும். உங்களைப் பொறுத்தவரை நான் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் என்று தான் தெரியும்,நானும் ஒரு ஆசிரியர்தான் நான் மருத்துவம் படித்துவிட்டு மருத்துவக் கல்லூரியிலேயே உதவி பேராசிரியராக பணியாற்றியதாகவும் உங்களுடைய கஷ்டம், நஷ்டங்கள் எனக்குத் தெரியும் என பேசினார்... நிகழ்ச்சியில் மாநில தலைவர் சுதாகர்,மாநில பொதுச் செயலாளர் கருணாநிதி,மாநில மகளிர் அணி செயலாளர் தேவி லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்...